கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்றும் நாளையும் கொழும்பில் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையிலேயே கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
#SriLankaNews