போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் , நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக இராணுவ கமாண்டோ பிரிவு அழைக்கப்பட்டுள்ளது.
அரச ஊடகங்களையும், பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் இன்று கைப்பற்றினர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்துவ சந்தியில் வைத்து தடுத்த பொலிஸாரும் படையினரும் அவர்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீச்சியடித்தும் கலைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
#SriLankaNews