மஹிந்த தலைமையில் வலுவான அரசு! – ஆளும் கட்சிக் கூட்டத்தில் பிரேரணை நிறைவேற்றம்

mahinda rajapaksa is at parliament

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது எனப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசு வலுவாக முகம்கொடுக்க வேண்டும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசு அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் யோசனையொன்றை முன்மொழிந்தார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி அந்த யோசனைக்கு ஏகமனதாக ஆதரவளித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் அதனை வழிமொழிந்தார் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version