” கோட்டா கோ ஹோம்” எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள்.”
இவ்வாறு போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர் வீடு செல்லவில்லை. அதன்பின்னர் ஜேஆரை எதிர்த்தனர். அவரும் வீடு செல்லவில்லை. எனவே, கோட்டா கோ ஹோம் என்ற பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள்.
காலம் வரும்போது ஜனாதிபதி நிச்சயம் செல்வார். அவர் வீடு செல்ல வேண்டுமா என்பதை தேர்தல் தீர்மானிக்கப்படும். காலி முகத்திடலில் உள்ள இளைஞர்களை சிலர், விற்று பிழைக்கின்றனர்.” – என்றார்.
#SriLankaNews

