அடக்குமுறையை நிறுத்தாவிடின் பாரிய போராட்டம்!

20220319 114838 scaled e1649815234236

போராட்டக்காரர்களுக்கு எதிரான கைது வேட்டையை, அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

அவ்வாறு இல்லாவிட்டால் மக்களுடன் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உட்பட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், போராடும் உரிமையை எவரும் தடுக்க முடியாது எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version