நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன், அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டம் திருப்திகரமாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் யோசனை முன்வைத்துள்ளார்.
#SriLankaNews