இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக அமைச்சு ஒரு வழிகாட்டுதல் குழுவை (Steering Committee) ஸ்தாபித்து வருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கு அமைய டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு மூலோபாய கட்டமைப்பை உருவாக்குவது குறித்துச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, சர்வதேசத் திட்டங்கள், மனிதவள அபிவிருத்தி ஆகியவை முக்கியமாகப் பரிசீலிக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர்களான ஹன்சக விஜேமுனி, எரங்க வீரரத்ன மற்றும் ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஹன்ஸ் விஜேசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.