தொடரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டம்!

153224 strike

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டம் நாளை காலை 8 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டிருந்த மக்கள் மீது பொலிஸார் முன்னிலையில் தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து ,நேற்று(9) பிற்பகல் 2 மணியில் இருந்து தொழிற்சங்கப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் வைத்திய நிபுணர்களின் அமையம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.

அந்த வகையில் அரச வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளில் இருந்து வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version