உலகளவில் புகழ்பெற்ற இலங்கையின் சிங்கள பாடகி யொஹானிக்கு அரச விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.
இவர் பாடிய ‘மெனிகே மகே இதே..’என்ற சிங்கள பாடல் உலக அரங்கில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறித்த பாடல் இலங்கையை தாண்டி உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளதுடன், தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் “யூடியூப்” பார்வைகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டிய பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
Leave a comment