நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்து பின் கதவால் அமைச்சு பதவி பெறும் அரசியல் தாவல்கள் ஆரம்பித்துள்ளன.
குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சற்று நேரத்திற்கு முன்னர் விவசாய ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததாக ராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சாந்த பண்டார அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மேலும் பலர் இந்த கபட வலைக்குள் சிக்கலாம் என தெரிகிறது.
#SriLankaNews
Leave a comment