விசாரணைகளை ஆரம்பிக்குக! – மொட்டு எம்பிக்கள் கோரிக்கை

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எதிராக முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கடந்த வாரம் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மே 9ஆம் திகதியன்று எம்.பிக்களின் வீடுகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க சொத்துக்களை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் எம்.பிக்கள் குழுவொன்று இது தொடர்பில் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மொட்டு எம்.பிக்கள் சிலர் அரசாங்க தலைவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

#srilankanews

Exit mobile version