Untitled 1 38 scaled
இலங்கைசெய்திகள்

பச்சைக் கொடி காட்டிய சீனா : அலி சப்ரி

Share

இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குநரான சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள அமைச்சர் சப்ரி, சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வு பலினுடன் பேச்சு நடத்தினார்.

இதன்போது இலங்கையின் பேச்சுவார்த்தையாளர்களுடன் ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாகவும், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் சீன வங்கி உறுதியளித்ததாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியது.

இதனையடுத்து தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க அரசாங்கம் தனது கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை உருவாக்கியுள்ளன.

இந்தநிலையில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 10 சதவீதம் சீனாவில் இருந்து பெறப்பட்ட கடன்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...