நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் நிலைமை தொடரும் எனவும் அதனால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews