டிசம்பர் மாதம் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
டிசம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 57,394 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கயைம, டிசம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ரஷ்யாவிலிருந்து 8,004 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 5,991 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 5,336 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,894 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் 13 இலட்சத்து 34 ஆயிரத்து 345 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.