16 17
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வடக்கின் ஆசிரியர் மீண்டும் கொழும்பிற்கு அழைப்பு!

Share

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வடக்கின் ஆசிரியர் மீண்டும் கொழும்பிற்கு அழைப்பு!

அரசாங்கத்தால் கவனமாகப் பயன்படுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி,  கிளிநொச்சியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மீண்டும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு பொலிஸார் அழைத்துள்ளனர்.

கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம், 2024 நவம்பர் 6ஆம் திகதி பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2025 பெப்ரவரி 17ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01இல் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டில் ஈழம் வரைபடம் மற்றும் கனகபுரம் மயானத்தின் வாயிலின் மாதிரியை உருவாக்க உதவிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் 2025 பெப்ரவரி 17ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனுக்கு பொலிஸார் அனுப்பியுள்ள தகவல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பிக்கும் வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறி அச்சுறுத்தியதாக கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கொழும்பிற்கு உங்களை மீண்டும் அழைக்க வேண்டியேற்படும். நீங்கள் எங்களுக்கு நாம் கோரும் தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையேல் உங்களை கைது செய்ய வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டனர்.

நான் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கூறினேன். நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் என்னுடைய அடிப்படை உரிமை மீறப்படும் என முறைப்பாடுகளை செய்ய வேண்டியேற்படும். என்னை பாதுகாக்க சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படலாம் எனச் சொன்னேன்.”

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, இதுத் தொடர்பில் கடந்த காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

2024ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு தன்னை அழைத்த அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் சுட்டிக்காட்டுகின்றார்.

விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர்,  இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் போது இலங்கையின் வரைபடத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் வகையில் இல்லத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறெனினும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வழங்க அவர் கடுமையாக மறுத்திருந்ததாகவும். தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...