15 18
சினிமாபொழுதுபோக்கு

3 நாளில் பேக்கப் ஆன சஞ்சய் பட சூட்டிங்.! விலகும் முடிவில் லைகா? கை கொடுப்பாரா விஜய்

Share

3 நாளில் பேக்கப் ஆன சஞ்சய் பட சூட்டிங்.! விலகும் முடிவில் லைகா? கை கொடுப்பாரா விஜய்

கோலிவுட்டில் பிரபல நடிகராக காணப்படும்  இளைய தளபதி விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய். தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைந்துள்ளதால் விஜயின் வாரிசை சினிமாவில் உட்பகுத்த பலரும் முயற்சித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின்பு அந்த படத்திற்கான ஹீரோ தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால் இறுதியில் ராயன் படத்தில் நடித்த சுந்திப் கிஷானை ஹீரோவாக நியமித்தார் சஞ்சய். இதற்கான படப்பிடிப்புகளும் சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் சிக்கலில் காணப்படுவதாகவும் இதனால் லைக்கா நிறுவனம் இதிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு ஆரம்பத்திலிருந்து பல சிக்கல்கள் எழுந்தன. ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி தற்போது ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் புதிதாக சிக்கல் எழுந்துள்ளன.

ஏற்கனவே லைக்கா நிறுவனம் இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி என படங்களை தயாரித்து தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அதனை ஜேசன் சஞ்சய் படத்தில் செய்யலாம் என திட்டமிட்டது.

ஆனாலும் தற்போது ஷூட்டிங்கில் இடம் பெற்ற பிரச்சனையால் மூன்று நாட்களிலேயே பேக்கப் பண்ணப்பட்டதாகவும் இதிலிருந்து விலக முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை இருந்து லைக்கா நிறுவனம் விலகினாலும் அவருடைய படத்தை தயாரிப்பதற்கு வேறு பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...