Mahinda Ranil 2 1 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் கைது

Share

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் கைது

எல்பிட்டிய – பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தல்கஸ்வல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இருவர் என தெரியவந்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (16.3.2024) இடம்பெற்றுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 11ஆம் திகதி பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல சந்தி பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வூ-56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்

குற்றத்தை திட்டமிட்ட சந்தேகநபரும் அதற்கு உதவிய சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 03 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...