17
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் தகவல்

Share

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் தகவல்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்பட்ட கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8% ஆகும். அதன்படி, குடும்பப் பிரிவினருக்கான கட்டணத்தில் 25.5% குறைப்பும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 3% குறைப்பும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகளின்படி, ஹோட்டல் மற்றும் தொழில்துறைக்கான கட்டணக் குறைப்பு எதுவும் முன்மொழியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...