tamilni 166 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு!

Share

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு!

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தின் போதான வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியான தனது மகளை கடத்த முயற்சித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தலினையும் மீறி தான் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்டமையினால் அரசாங்க உத்தியோகத்தரான தனது சகோதரனை கடத்தி மட்டக்களப்பில் மறைத்துவைத்து தன்னை அச்சுறுத்தியமையினால் குடும்பத்தினரின் அழுத்தத்தினால் இரண்டாவது வாக்கெடுப்பினை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.

எனவே இவ்வாறான சம்பவங்களை கருணா குழுவினர் மேற்கொண்டதினை தான் நேரடியாக அறிந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்திய காணொளி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...