tamilni 165 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

Share

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று 11ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட 4.65 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நிலநடுக்கம் குறித்து பேராசிரியர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் இந்தோ – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தகடு மற்றும் இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான டெக்டோனிக் தகடுகளில் 08 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த ஆழ்கடல் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனவும், கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் நடுக்கம் ஏற்பட்டால் சுனாமி அபாயம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதுடன், மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை இந்திய – அவுஸ்திரேலிய பீடபூமியில் அமைந்துள்ள இரண்டு தகடுகள் பிரிந்து பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களே இந்த நிலநடுக்கங்களுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அரைக்கோளத்தில் எதிர்காலத்தில் பல நிலநடுக்கங்கள் ஏற்படலாம் எனவும், அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...