download 8 1 12
அரசியல்இலங்கைசெய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சிறீதரன் சந்திப்பு!

Share
இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (24) நண்பகல், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரண அறிக்கை ஒன்றை கடந்த 2023.05.09 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்த சிறீதரன் எம்.பி, அவ் அறிக்கையின் பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்,  இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் என்பவற்றுக்கு தனித்தனியே அனுப்பிவைத்திருந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அவ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, ஆணைக்குழுவின் பிரதானிகளால் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, தனியாருக்கோ, மத நிறுவனங்களுக்கோ சொந்தமான காணிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது, பொலிஸ் முறைப்பாடு செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் கையாளும் பட்சத்தில், இதுவிடயமாக  தமது நிறுவனம் சார்ந்து மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர், நீதிபதி.ரோகினி மாரசிங்க சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
#srilankaNews

Share
தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...