57 நாடுகளுக்கு இலங்கையர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
இலங்கைசெய்திகள்

57 நாடுகளுக்கு இலங்கையர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

Share

57 நாடுகளுக்கு இலங்கையர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

வெளி நாடுகளுக்கு கண் தானம் வழங்குவதற்கு இலங்கையர்கள் பாரியளவில் பங்களிப்பு செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த 28 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 57 நாடுகளைச் சேர்ந்த 1,767 பேருக்குப் பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதயாராச்சி கூறியுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒரு கண் அல்லது இரண்டு கண்களாலும் பார்க்க முடியாத எந்தவொரு நபருக்கும் இலங்கை கண் மருத்துவ சங்கம் இலவசமாக கண்களை வழங்க முன்வருவதாகவும் ஜகத் சமன் மாதயாராச்சி தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...