8 55
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டை இணையவழியில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு

Share

வெளிநாட்டு கடவுச்சீட்டை இணையவழியில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு

வெளிநாடுகளிலுள்ள  இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் இணையம் ஊடாக விண்ணப்ப படிவம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்புவதும் விரல் அடையாளம் பெறுவதும் தூதரக காரியாலயங்களிலேயே மேற்கொள்ளப்படும்.

முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 20 தூதரக காரியங்களில் இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஏனைய தூதரக காரியாலயங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்புக்கும், துறைசார் அமைச்சரான விஜித்த ஹேரத்திற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
wimal weerawansa
செய்திகள்அரசியல்இலங்கை

விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவருக்கு எதிரான வழக்கு: கறுவாத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத்...

gold
இலங்கைசெய்திகள்

உச்சத்தை எட்டும் தங்க விலை: இலங்கையில் ஒரு பவுண் 368,000 ரூபாயைக் கடந்தது!

இலங்கையில் தங்க விலையில் இன்று (19) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும்...

9d3028b0 ffa1 11ed b00f ddb5dcfba4e2.jpg
செய்திகள்இலங்கை

நிலச்சரிவில் வெளிப்பட்ட நீல நிறப் பாறை – ரத்தினக் கல்லா என மக்கள் வியப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி காரணமாக நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, கலஹா பகுதியில்...

WhatsApp Image 2026 01 19 at 14.13.35
உலகம்செய்திகள்

சிலி நாட்டில் காட்டுத்தீ ருத்ரதாண்டவம்: 18 பேர் உயிரிழப்பு – 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்!

தென் அமெரிக்க நாடான சிலியில் (Chile) பரவி வரும் கடும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 18...