சீனாவில் நடைபெறவுள்ள இலங்கையின் வர்த்தக மற்றும் கலாச்சார கண்காட்சி

tamilni 418

சீனாவில் நடைபெறவுள்ள இலங்கையின் வர்த்தக மற்றும் கலாச்சார கண்காட்சி

இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாச்சார கண்காட்சி சீனாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கண்காட்சியானது எதிர்வரம் மார்ச் மாதம் சீனாவின் சியான் மாகாணத்தில் உள்ள பாவோஜி நகரில் இடம்பெறவுள்ளது.

இதில் வர்த்தகர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்கவுள்ளதாகவும், இலங்கை தயாரிப்புகளை காட்சிப்படுத்த 40க்கும் மேற்பட்ட இலங்கையின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த கண்காட்சியின் சீன மற்றும் இலங்கை ஏற்பாட்டாளர்கள் குழுவொன்று, இந்த வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து, சின்ஜியாங்கில் இலங்கையின் உத்தேச கண்காட்சி குறித்து விளக்கமளித்துள்ளது.

மேலும், இதன் ஊடாக இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளையும் ஊக்குவிக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version