tamilni 379 scaled
இலங்கைசெய்திகள்

எம்மை ஏமாற்ற முடியாது : கடும் தொனியில் தெரிவித்த சம்பந்தன்

Share

எம்மை ஏமாற்ற முடியாது : கடும் தொனியில் தெரிவித்த சம்பந்தன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஒப்பந்தமான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடி’யைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாறத் தயாரில்லை என்றும் இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கடும் தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது.

இதன்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின் இந்த நாட்டுக்கு எதிராகச் சர்வதேச சமூகத்தை நாங்கள் நாடுவோம். எனவே, அந்த நிலைமைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய நீதிமன்ற முறைமை உள்வாங்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

Share
தொடர்புடையது
bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...