24 66173c095b57f
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் அதிகரிப்பு : ரணில் வெளியிட்ட தகவல்

Share

ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் அதிகரிப்பு : ரணில் வெளியிட்ட தகவல்

ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த சிரமங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் அனைவரும் தற்போது சற்று தளர்வாக வாழ்க்கையை கழித்து வருகின்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான நிலைமை ஒன்று காணப்படவில்லை.

அனைவரும் துன்பங்களை அனுபவித்தோம். பணிக்கு செல்ல முடியவில்லை. உணவு பெற்றுக் கொள்ள முடியவில்லை.

மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போனது பாடசாலைகள் மூடப்பட்டது. அதிகமான துன்பங்களை நீங்களே அனுபவித்தீர்கள்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள், பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்த மக்கள், விவசாயிகள் போன்றோர் கடும் நெருக்கடியின் போதும் அதனை பொறுத்துக் கொண்டனர். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாட்டை ஏற்கும் போது கடுமையான சிக்கலுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என நான் நினைத்தேன்.

அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். வற் வரி அதிகரித்தோம். அந்த வரியை நீங்களே சுமந்தீர்கள். அதனை சுமந்தமையினால் நாடு நிலையான நிலைக்குள்ளாகியுள்ளது.

தற்போது கடன் பெறுவதில்லை. டொலர் பெறுமதி குறைந்துள்ளது. மேலும் குறையும். 280 ரூபாயை எட்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்தென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...