21 12
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்….! இந்திய ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Share

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்….! இந்திய ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் யார் என்பது தொடர்பான தகவலை இந்திய ஜோதிட நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கதிர் சுப்பையா என அடையாளப்படுத்தப்படும் இந்திய ஜோதிடர் அமெரிக்காவில் இருந்து செயல்படும் தனது யூடியூப் சேனலில் கணிப்பு ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

அதில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் ஜோதிட நிலையை கருத்திற் கு கொண்டு பகுப்பாய்வு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்கவின், ஜாதகத்தில், வியாழன் வலுவிழந்து, சந்திரனுடன் இணைந்து, சக்திவாய்ந்த யோகத்தை உருவாக்கியுள்ளது.

2002 வரை அவர் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் 2004 முதல் நல்ல பலனைத் தரவில்லை. ஆனால் இப்போது அவருக்கு நல்ல பலன்களைத் தர வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்த சஜித் பிரேமதாசவின் ஜாதகத்தில், வியாழன் சந்திரன் மற்றும் சனியால் உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவருக்கும் சாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்கவின் ஜாதக நிலைக்கு அமைய, கடந்த சில வருடங்களாக சனி மகாதிசையை ஆரம்பித்து, சனியும் ராகுவும் அவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இணைந்துள்ளன.

மேலும் அவரது ஜாதகத்தில் வியாழன், செவ்வாய் மற்றும் செவ்வாய் சேர்க்கை ஒரு சக்திவாய்ந்த கேந்திர யோகம் மற்றும் சிறந்த யோகத்தை உருவாக்குகிறது.

மூன்று வேட்பாளர்களும் மகர ராசியைச் சேர்ந்தவர்கள் என்பதால், முடிவுகளை கணிப்பது மிகவும் கடினமாகும்.

இந்த வேட்பாளர்களுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கலாம். தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவோரு வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளை பெற மாட்டார்கள்.

அதற்கமைய இரண்டாவது சுற்றில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இளம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என ஜோதிடர் கதிர் சுப்பையா தனது கணிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...