tamilni 331 scaled
இலங்கைசெய்திகள்

கோடிக்கணக்கில் தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள்

Share

கோடிக்கணக்கில் தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள்

நாட்டு மக்கள் இவ்வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் 11 இலட்சம் குடும்பங்கள் தமது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஓரளவு நிவாரணம் பெறுவதற்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு வழங்காவிட்டால் மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...