24 66350f1214952
இலங்கைசெய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு

Share

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.

இதன்படி, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானமாக 33,710 கோடி ரூபாவை (1,138.9 அமெரிக்க டொலர்கள்) பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 9.77 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தின் ஏற்றுமதி செயற்பாடுகள் பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 7.51 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இவ்வருடத்தின் மார்ச் மாதத்துக்கான சேவை ஏற்றுமதியின் பெறுமதி 275.1 மில்லியன் அமெரிக்க டொலரென்றும், கடந்த வருடத்தின் இக்காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், அது நூற்றுக்கு 8.39 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் முழு வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி உள்ளிட்ட முழுமையான ஏற்றுமதி வருமானம் 4.1 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களான ஆடைகள், தேயிலை, இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தேங்காய், தெங்கு சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கான கேள்விகள் குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆடைகள், தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் தெங்கு உற்பத்திப் பொருட்கள் மாணிக்கக்கற்கள் இலத்திரனியல், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பட்ட உணவுகள், கடலுணவு, வளர்ப்பு மீன்கள், மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் மூலமான ஏற்றுமதி வருமானமே அதிகரித்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வர்த்தக உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், துருக்கி மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் முக்கியமாக உள்ளன.

அந்த வகையில் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் அதிக ஏற்றுமதி வருமானம் ஐக்கிய இராஜ்ஜியம் தவிர ஐரோப்பிய நாடுகள் மூலமே கிடைத்துள்ளன.

அது 248,48 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில், அது 4.79 வீத அதிகரிப்பு என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 241. 5 மில்லியன் டொலர்களும், தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி வருமானமாக 103.52 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...