இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்

11 2

இலங்கையிலேயே விசர்நாய் கடியை (Rabies) முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற சிறப்பு அந்தஸ்தை அநுராதபுரம் விரைவில் பெறவுள்ளதாக விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் சிமித் நாணயக்கார அறிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அனுராதபுரம் மாநகர சபை பகுதியில் உள்ள 30 முக்கிய இடங்களில் ஒழிப்புத் திட்டத்தை ஆரம்பிப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில், மாவட்டத்தின் நாய்களில் சுமார் 80% நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இத்திட்டம் நகர மையத்திலிருந்து படிப்படியாக 15 கிலோமீட்டர் சுற்றளவு வரை விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கவில்லை என்றாலும், அநுராதபுரம் மாநகர சபை, ஜஸ்டிஸ் ஃபோர் எனிமல்ஸ் ஸ்ரீ லங்கா அமைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த இலக்கை அடைய முடிந்தது என்று வைத்தியர் சிமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Exit mobile version