ரஷ்யாவிற்கு பயணமாகும் விசேட தூதுக்குழு: கடத்தலை ஆராய நடவடிக்கை

24 666501f626440

ரஷ்யாவிற்கு பயணமாகும் விசேட தூதுக்குழு: கடத்தலை ஆராய நடவடிக்கை

ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ வீரர்களை கடத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கை தூதுக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 25ஆம் திகதி குறித்த குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினரின் கடத்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதிகாரிகள் குழு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாதுகாப்பு செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களை கடத்தியமை தொடர்பில் இதுவரை 486 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான எந்தவொரு தகவலையும் 011 2 44 11 46 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version