8 13
இலங்கைசெய்திகள்

சட்டத்தை மீறும் நிலைப்பாட்டில் இலங்கை இராணுவம்! கஜேந்திரகுமார் ஆதங்கம்

Share

இராணுவமென்றால் எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்ற நிலை இருக்கமுடியாது எனவும், காட்டுச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் நேற்றைய நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி  யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போதும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்போது தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ள நிலம் தனியாருக்கு சொந்தமான நிலம் என்றும், எந்தவொரு முறையான சட்ட நடைமுறையும் இன்றி, சட்ட விரோதமாகவே விகாரை கட்டப்பட்டது என்றும், இவ்விடயம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.

இந்த நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவரிடம் புதியதொரு விடயத்தைக் கொண்டுவருகின்றேன்.

அகில  இலங்கை பௌத்த காங்கிரஸ் எழுதிய கடிதம் தொடர்பாக இன்றைய உதயன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்விடயம் தொடர்பான கடிதத்தை இன்று சபையில் சமர்ப்பிக்கிறேன்.

அக்கடிதத்தில் சந்திரா நிமல் வாக்கிஸ்கா என்பவர் அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் என்று அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானமுள்ள 6 ஏக்கர் காணியும், உண்மையில் தனியாருக்குச் சொந்தமானதான இருக்கும் நிலையில், சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள இடம் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இருந்து திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது எனவும்,  திஸ்ஸ விகாரைக்கு 14 ஏக்கர் காணி இருந்ததெனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தனியாருக்குச் சொந்தமான காணிகளையும், அதனுடன் சேர்த்து மேலும் பல ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்து வழங்க வேண்டும் என்றும், தனியாருக்கு சொந்தமான காணிகளை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குழுக்களின் பிரதித் தலைவரே, இராணுவம் ஒரு இனவாத கட்டமைப்பில் செயற்படுகின்றது என்று நான் குறிப்பிடுவது இதனால்தான்.

அது அதன் மனநிலையையிலிருந்து மாற்றவில்லை. நான் கூறும் கூற்றுக்களில் ஓரளவு உண்மை இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் சட்டபூர்வ செயல்முறையொன்றுக்கு செல்ல வேண்டும்.

இன்னும் அந்த அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகிறார்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...