tamilni 305 scaled
இலங்கைசெய்திகள்

காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் விபரீத முடிவு

Share

காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் விபரீத முடிவு

இறக்குவானை பிரதேசத்தில் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இறக்குவானையை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞனே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும், நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் இறந்தவரின் சகோதரி ஒருவர் தெரிவித்தார்.

இறப்பதற்கு முன் குறித்த இளைஞன் தனது கையை பிளேடால் வெட்டிக் கொண்டதை மரண விசாரணை அதிகாரி அவதானித்துள்ளார்.

இந்த மரணம் தற்கொலை என தெரிவித்த மரண விசாரணை அதிகாரி, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...