தொடருந்து பயணிகளுக்கான அவசர அறிவிப்பு
தொடருந்து சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக தொடருந்து போக்குவரத்து சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றிரவு(23.07.2023) இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இன்று(24.07.2023) காலை இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகளும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையினை முன்னிறுத்தி தொடருந்து சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment