2015இல் எங்கு பார்த்தாலும் மகிந்தவின் சுவரொட்டிகள்!
தேசிய நாயகனாகப் போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அரசியல் களத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஓன்று கூறுகிறது.
The pioneer என்ற நாளிதழின் ஊடகவியாளர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டு, தாம் முதன் முறையாக பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்றுக்காக இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது, கண்ட காட்சிகளை அவர் விபரித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலை நகருக்குச் செல்லும் பாதையின் நெடுகில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமைக்காக, எந்த இடத்தையும் விட்டு வைக்காத வகையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அத்துடன் இரண்டு நாட்கள் நீடித்த இந்த கருத்தரங்கு முழுவதும், சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மகிந்த ராஜபக்ச மீது புகழை பொழிவதில் பரஸ்பரம் போட்டியிட்டனர்.
ஜனாதிபதி ராஜபக்சவின் தத்துவமான “மகிந்த சிந்தனை” நாடு முழுவதும் பேசப்பட்டது. இதுவே, மகிந்த ராஜபக்சவை முன்கூட்டிய வாக்கெடுப்பிற்கு செல்லத் தூண்டியது. கருத்து கணிப்பாளர்களும் ராஜபக்சே வெற்றி பெறுவார் என்று முன்னறிவித்தனர்.
ஆனால் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. ராஜபக்சர்களை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு தமது இரண்டாவது இலங்கைப் பயணத்தின் போது மகிந்த ராஜபக்சவின் படங்களை எங்கும் பார்க்கவில்லை. மகிந்த சிந்தனையில் சொற்பொழிவு செய்தவர்களைக் காணவில்லை.
மகிந்தவோ சிந்தனையோ இருக்கவில்லை. பண்டைய கேரளக் கவிஞரான பூந்தனத்தின் கவிதைப் படைப்பான ஞானப்பனாவின் கூற்றுப்படி அரண்மனை ஆலோசகர்களின் வார்த்தைகளை பின்பற்றும் ஆட்சியாளர்கள் சில நாட்களில் மறைந்து விடுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
இறைவன் விரும்பினால், ஒரு அரசனை பிச்சைக்காரனாக முடியும் என்ற கூற்றை, த பயணீர் நாளிதழின் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment