24 66595c3ce5437
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

இலங்கையிலுள்ள சதுப்பு நிலங்கள் தொடர்பில் அறிவிப்பு

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ((IUCN) ) தமிழ்நாடு, இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை மிகவும் அபாயகரமானதாக பட்டியலிட்டுள்ளது.

தமது முதல் உலகளாவிய மதிப்பீட்டில் இந்த விடயத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து. சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை 20 கிராம சதுப்புநில குழுக்களை அமைத்துள்ளது என்று இந்திய மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் உலகெங்கிலும் உள்ள 36 புவியியல் பகுதிகளில் வெப்பமான மிதமான வடமேற்கு அத்திலாந்திக் பிராந்தியத்தைத் தவிர தென் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவுகள் மட்டுமே ஆபத்தான நிலையைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லுயிர் பாதுகாப்பு, உள்ளூர் சமூகங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றிற்கு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் முக்கியமானவை.

எனினும், சதுப்பு நிலங்களுக்கு அச்சுறுத்தல்கள் வேகமாக உருவாகி வருகின்றன என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
25 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விமானச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க விசேட நடவடிக்கை: பிரதி அமைச்சர் தலைமையில் முக்கியக் கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சிவில் விமானச் சேவைகளைத் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

24 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல்: இந்திய நிறுவனத்திற்கு அனுமதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில், அவசரகால அடிப்படையில் 05...

23 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தென் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை: 250 கிலோ கொக்கைனுடன் 6 பேர் கைது!

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

22 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்றொழில் அதிகாரிகளுக்கு இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்கள்: இந்திய அரசு நிதியுதவி!

இலங்கை கடற்றொழில் துறையில் களப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு இலத்திரனியல்...