rtjy 96 scaled
இலங்கைசெய்திகள்

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

Share

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அதன் சட்ட நடைமுறைப்படுத்தல் பிரிவினர், பாதுகாப்பு படையினர் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் என்பன விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.

இதன்படி, சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டமை தெரியவந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பழியை இராணுவப்புலனாய்வு பிரிவு மீதும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் அப்பட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிக்கிறது. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் வேதன பட்டியலில் இருந்ததில்லை.

இவ்வாறான தீங்கிழைக்கும் மற்றும் மோசமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளுக்கு சனல் 4 ஊடகமே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Gallery

Gallery

Gallery

Share
தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

கொழும்பு கங்காராமயவில் இந்தியப் புனித சின்னங்கள் காட்சி: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4-ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ள நிலையில், அவற்றைப்...

7l7ab4lg cockroach 625x300 21 October 25
செய்திகள்உலகம்

முன்னாள் காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம்! – போலாந்து மிருகக்காட்சிசாலையின் விசித்திர பழிவாங்கல் திட்டம்.

காதலர் தினத்தை முன்னிட்டு முன்னாள் காதலன் அல்லது காதலியின் (Ex) நினைவுகளை வித்தியாசமான முறையில் துடைத்தெறிய...

25 6805ebdd84328
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபம் – குருநாகல் வீதியில் கோர விபத்து: பாரவூர்தி மோதி 13 வயது சிறுவன் பலி!

சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில், வீதியோரத்தில் நடந்து சென்ற...

child labour india 2.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீருடையில் மறைந்திருக்கும் அவலம்: வருமானம் தேடி சட்டவிரோத தொழில்களில் சிறுவர்கள் – தொழில் அமைச்சு கண்டனம்!

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பல்வேறு சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதோடு, அதனை மறைப்பதற்காகப் பாடசாலை சீருடையைப்...