24 662c9db259733 1
இலங்கைசெய்திகள்

அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை

Share

அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடல் எல்லையை பயன்படுத்தாமல், எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் இதர வசதிகளை பெற அமெரிக்க ஆய்வு கப்பல் அனுமதி கோரியதால், சர்வதேச கடல் எல்லைக்கு சென்று அதற்கான வசதிகளை செய்து தர அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி குறித்த அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ளதாகவும், எனினும் இலங்கை சார்பில் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னர் சீனாவின் ஆய்வுக் கப்பல் ஒன்று நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையும் அரசால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....