rtjy 74 scaled
இலங்கைசெய்திகள்

அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்: அம்மையார் எச்சரிக்கை

Share

அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்: அம்மையார் எச்சரிக்கை

அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.

நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்ரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.

ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசில் உள்ளார்கள். ரணில் திருடுகின்றார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் திருடுகின்றார்கள். உதாரணத்துக்குச் சுகாதார அமைச்சரைப் பாருங்கள். அவரின் அமைச்சில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

அவரை அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலிருந்தும் அகற்ற வேண்டும். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான பிரேரணைகளைக் கொண்டு வர வேண்டும்.

ஊழல், மோசடியே நாட்டைப் பின்னுக்குத் தள்ளும். இவ்வாறான ஊழல், மோசடி வஞ்சகர்கள் அதிகாரத்தில் உள்ளார்கள்.

மக்கள் கோபமாக இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்சவின் விலகலுக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்றார்.

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...