இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

tamilni 123

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சரியான நேரத்தில் தேர்தல்கள் முக்கியம். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பனவும் நடைபெறுமென அமெரிக்கா நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவை அனைத்தும் மக்களுக்கு குரல் கொடுக்கின்றன, வாக்குப்பெட்டியின் மூலம் தங்கள் கருத்தைக் கூற முடியும் மற்றும் அவர்களின் தலைமையைத் தேர்ந்தெடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வருடமும் அதற்குப் பின்னரும் தேர்தல்கள் திட்டமிடப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

அத்துடன் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் காண அமெரிக்கா ஆவலுடன் காத்திருக்கிறது என்றும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Exit mobile version