Untitled 12 1
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! பொன்சேகாவிற்கு தெரிந்த இரகசியம்

Share

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் முற்றாக அழித்துவிட்டோம். எனவே பாதாள உலகக் குழுவினர் புலிகளின் ஆயுதங்களை பயன்படுத்துவதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கும் எதிர்க்கட்சியினர் தொடர்பில் எனக்கு நன்கு தெரியும். எனினும் அது குறித்து என்னால் தெரிவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எல்லா பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதங்களும் எம்மால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எனவே பாதாள உலகக் குழுவினர் புலிகளின் ஆயுதங்களை பயன்படுத்துவதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால் பாதாள உலகக்குழுவினருக்கு இன்று ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வது கடினமான விடயமல்ல. நாட்டில் பல விடயங்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் அதிகாரம் முறையாகப் பயன்படுத்தப்படாமையே இதற்கான காரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து யார் அரசாங்கத்துடன் இணைவார்கள் என என்னால் கூற முடியாது. எனினும் ஜனாதிபதியுடன் தொடர்பிலுள்ள சிலர் பற்றி நான் அறிவேன். அது தொடர்பில் என்னால் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டு என்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாம். எனினும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிச் சென்று, அக்கட்சியை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...