tamilni 63 scaled
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்!

Share

ராஜபக்ச திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்!

எனது உயிரை பறித்தாலும் ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மினுவாங்கொட ஜனபவுர மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”சில தலைவர்கள் கோப்புகளை தூக்கிக் கொண்டு கூட்டங்களுக்கு வந்து ஊழல் பேரங்கள் குறித்து பேசி ஆட்சிக்கு வந்ததும் தண்டிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது நாட்டை வங்குரோத்தாக்கியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறினார்கள் என்ற தீர்ப்பை பெற நடவடிக்கை எடுத்தது.

இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.

ஐக்கிய மக்கள் சக்தி கோப்புகளை காட்டி பொய்யான நடவடிக்கைகளை நடத்துவதில்லை.

ஊழலுக்கு எதிராக முன்னிற்கின்றோம் என்று கூறும் சில தரப்பின் பொய்யை நம்பி ஏமாற வேண்டாம். உண்மையாகவும் தூய்மையாகவும் ஐக்கிய மக்கள் சக்தியானது திருடர்களுடன் எந்த டீல்களையும் மேற்கொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி திருடர்களை பிடிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை வெளிக்கொணர முடிந்தது.

தற்போது கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் பணி நடந்து வருகின்றது.

இந்த மனுவின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கிய 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குடியுரிமைகளை இல்லாதொழிக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பெடுத்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பல்வேறு தடங்களை ஏற்படுத்தி நாம் கையில் வைத்திருந்த பத்திரங்களைக் கூடப் பறித்தெடுத்தனர்.

எனது உயிரை பறித்தாலும் இந்த திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்.”என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...