மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் நாட்டில் இல்லை: கம்மன்பில
மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் எவரும் இங்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“69 இலட்சம் மக்களின் வாக்குப் பெரும்பான்மையில் கோட்டாபய ராசபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார்.
மக்களின் வாக்குப்பெரும்பான்மையில் ஆட்சிபீடமேறிய கோட்டாபய இடைநடுவில் இந்த நாட்டை விட்டுச் சென்றார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தது. இன்று இந்த நாட்டில் நல்லாட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில், சஜித், அநுர ஆகிய மூவர் களமிறங்க காத்திருக்கின்றனர்.
ஆனால் 69 இலட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு வேட்பாளர் எவரும் இல்லை என்றே கூறவேண்டும்’ என்றார்.
Comments are closed.