rtjy 26 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

Share

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

வெகுவிரைவில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளோம், திர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரகம பகுதியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை கிடையாது. கட்சி இல்லாதொழிந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகிறார். நாடாளுமன்றத்தில் உள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணியமைத்து புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன என்பது ஒரு கட்சியா என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பினார். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதை அவரும், சுதந்திரக் கட்சியினரும் மறந்து விட்டார்கள்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து அடுத்தக்கட்ட அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

சுதந்திரக் கட்சியினருடன் கூட்டணி அமைக்கும் தரப்பினர் எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். வெகுவிரைவில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

கட்சியின் செயற்பாடுகளுடன் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...