இலங்கையில் குறி வைக்கப்படும் தேரர்கள்

tamilni 399

இலங்கையில் குறி வைக்கப்படும் தேரர்கள்

குருநாகல் தொடம்கஸ்லந்த உடத்தாபொல புராதன விகாரையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விகாரை பீடாதிபதி கல்னாவே தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

விடுதியில் வேறு இடத்தில் தேரர் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version