ரணிலின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர்
இலங்கைசெய்திகள்

ரணிலின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர்

Share

ரணிலின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர்

“ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருக்கின்றார்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் “ரணில் விக்ரமசிங்கவின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர் என்றும் இதை வஜிர அபேவர்த்தன மறுக்க மாட்டார் என நான் நினைக்கின்றேன்” எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்கள் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே நாமல் நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “ராஜபக்சக்கள் எவரும் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று என்ன துணிவுடன் வஜிர கூறினார் என்று எனக்குத் தெரியாது.

மக்கள் ஆணை இன்னமும் ராஜபக்சக்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் உண்டு.

இதை வஜிர அபேவர்த்தன உள்ளிட்ட எவரும் நம்ப வில்லையாயின் தேசிய ரீதியில் தேர்தல் ஒன்றை விரைந்து நடத்திக் காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அந்தத் தேர்தலில் மக்கள் ஆணை எவருக்கு, எந்தக் கட்சிக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்” என கூறியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...