கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அறிவிப்பு

Share

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அறிவிப்பு

இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 8.30 மணிவரை இந்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான சேவையின் கீழ் 41588 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 26972 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களாக சகல ஆவணங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு இதுவரை 6405 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

குறைபாடுள்ள ஆவணங்களுடன் அனுப்பப்பட்ட 14676 விண்ணப்பங்கள் தொடர்பில் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறைபாடுள்ள ஆவணங்களை மீள அனுப்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகம் விண்ணப்பதாரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...