அரசியல் காற்று தம்பக்கம் வீசும் வரை காத்திருந்த அநுர
இலங்கை ஒரு வரலாற்று கட்டத்தில் உள்ளதாக ‘த காடியன்’ தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் வெறும் 3.8 வீத வாக்குகளைப் பெற்ற அநுரகுமார திசாநாயக்க இந்த வாரம் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) என்ற மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த அநுரகுமார, தேசிய மக்கள் சக்திக்கும் தலைமை தாங்குகிறார்.
1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. இதன்போது, பாரிய வன்முறைகள் ஜே.வி.பி மற்றும் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், புரட்சிகர மார்க்சிச – லெனினிசம் மற்றும் சிங்கள இன – தேசியவாதம் ஆகியவற்றின் கலவையிலிருந்து ஜேவிபி கட்சி வெகுதூரம் வந்து, மையவாத பிரதான நீரோட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
நாட்டின் தெற்கே கிராமப்புறங்களில் அதன் வேர்களில் இருந்து, கட்சி புறநகர் மற்றும் சிறிய நகரங்களில் அதன் தளத்தை மீண்டும் உருவாக்கியது. அத்துடன் ஊழலின் பிரச்சினையை கையில் எடுத்து நடுத்தர வர்க்கத்தை கூட கவர்ந்தது.

