rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

Share

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் 39வது உறுப்பு நாடாக இணைந்துள்ள இலங்கையை ஒன்றிணைந்த கடல்சார் படைகள் வரவேற்றுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் தளபதி வைஸ் அட்மி பிராட் கூப்பர் கூறியுள்ளார்.

மேலும், உலகின் மிக முக்கியமான நீர்வழிகள் சிலவற்றைப் பாதுகாக்கும் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் சர்வதேச கடற்படைக் கூட்டிற்கு இலங்கையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவுடன் இணைவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட நாட்டின் கடற்படைத் தளபதி வைஸ் அட்எம்.பிரியந்த பெரேரா, சர்வதேச பாதுகாப்பு கூட்டுறவு மற்றும் பிற பங்காளி நாடுகளுடன் கூட்டுப் பயிற்சிகள், கண்காணிப்புகள் மற்றும் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இலங்கை ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவானது பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, கடற்கொள்ளையைத் தடுப்பது, பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பான கடல்சார் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அத்துடன் உலகின் மிக முக்கியமான சில கப்பல் பாதைகளை உள்ளடக்கிய 3.2 மில்லியன் சதுர மைல் நீர் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதன் மூலம் கடற்படை கூட்டாண்மை சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...