இலங்கைசெய்திகள்

யாழில் பல இலட்சம் ரூபாவுக்கு மாம்பழத்தை வாங்கிய பெண்

Share
tamilni 122 scaled
Share

யாழில் பல இலட்சம் ரூபாவுக்கு மாம்பழத்தை வாங்கிய பெண்

யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 250,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.

கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை, உண்பதற்காக அல்லாமல், மாம்பழத்தை வெள்ளைத் துணியில் சுற்றி, வீட்டின் முன் கதவுக்கு மேலே தொங்கவிடுவதாக தெரியவந்துள்ளது.

இதன்மூலம், வீட்டிற்கு செழிப்பு வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வவுனியாவிலுள்ள இரண்டு ஆலயங்களில் நடைபெற்ற இவ்வாறான 2 ஏலங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கு பக்தர்களால் கொள்வனவு செய்யப்பட்டன.

சமகாலத்தில் வடபகுதியிலுள்ள கோவில்களில் வருடாந்த பூஜை மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன.

தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பழக் கூடையில் உள்ள பழங்களின் ஏலம் நள்ளிரவில் தொடங்குகிறது. மேலும் பழக் கூடையில் உள்ள மாம்பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...